ஸ்ட்ராபெர்ரி பச்சடிதேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள் - 1 கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, தேங்காய்ப்பால் (கெட்டியாக) - 1/2 கப். கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை

பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் ஸ்ட்ரா பெர்ரித்துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்துமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும். கண்களுக்கு விருந்தாகவும், விருந்துக்கு சுவை கூட்டுவதாகவும் இருக்கும்.