கத்தரிக்காய் பச்சடி



தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 1/4 கிலோ, சாம்பார் வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள் - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், புளி கரைசல் - 1/2 கப், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, வெந்தயம் - 1 டீஸ்பூன்.

செய்முறை

கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வெந்ததும் புளி கரைசலை சேர்க்கவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். வெண்பொங்கலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.