மாங்காய் இனிப்புப் பச்சடி
 தேவையான பொருட்கள்
மாங்காய்த்துண்டுகள் - 1 கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், வெல்லத்தூள் - 1/2 கப், எண்ணெய், உப்பு, கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, மாங்காய்த்துண்டுகள் சேர்த்துக் கிளறவும். உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கித் தேவையான தண்ணீர் சேர்க்கவும். நன்கு வெந்ததும் வெல்லத்தூள் சேர்க்கவும். வெல்லம் நன்கு கரைந்ததும் பச்சடி தயார். இனிப்பு, புளிப்பு, உப்பு என சுவையான மாங்காய் இனிப்புப் பச்சடி அனைவரையும் ஈர்க்கும்.
|