தர்பூசணி தயிர் பச்சடிதேவையான பொருட்கள்

தர்பூசணியின் வெள்ளைப்பகுதித் துண்டுகள் சிறியதாக நறுக்கியது - 1 கப், பச்சை மிளகாய் - 1, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு. தயிர் - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 1.

செய்முறை

தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். தர்பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, தர்பூசணித்துண்டுகள், காய்ந்த மிளகாய், உப்பு, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஆற வைத்துத் தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். தர்பூசணி தயிர் பச்சடி எல்லா வகை உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.