முருங்கைக்காய் பச்சடிதேவையான பொருட்கள்

முருங்கைக்காய்த் துண்டுகள் - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய்த்துண்டுகளை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். ஆறிய பின்னர் முருங்கைக்காயிலிருந்து சதைப்பற்றைத் தனியாக எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் முருங்கைக்காயின் சதைப்பற்று, அரைத்து விழுது, உப்பு, புளி கரைசல் எல்லாவற்றையும் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமை.