மாங்காய்ப் பச்சடிதேவையான பொருட்கள்

மாங்காய்த் துண்டுகள் - 2 கப் (சிறியதாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு வெடித்ததும் மாங்காய்த்துண்டுகளுடன், உப்பு சேர்த்துக்கிளறவும். பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கவும். தயிர் சாதத்துக்கு ஏற்ற மாங்காய்ப் பச்சடி தயார்.