மாம்பழ தக்காளிப் பச்சடி



தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1, தக்காளி - 1, சீரகத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை

மாம்பழம், தக்காளியைத் துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். அதில் நறுக்கிய பழங்களைச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கிளறவும். மிளகாய்த்தூள், சீரகத்தூள் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். மாம்பழம், தக்காளி இரு பழங்களின் சுவையும் கலந்த பச்சடி தயார்.