முருங்கைப்பூ பச்சடிதேவையான பொருட்கள்

முருங்கைப்பூ - 2 கப், தயிர் - 1/2 கப், தேங்காய்த்துருவல் - 1/2 கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை

தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் இவற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் முருங்கைப்பூ, கறிவேப்பிலையுடன் உப்பு சேர்த்து வதக்கவும். பூ வெந்ததும் அரைத்த விழுதைத் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். இறக்கி வைத்து ஆறியதும், தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பல மருத்துவக்குணங்கள் கொண்ட முருங்கைப்பூப் பச்சடி அனைவருக்கும் ஏற்றது.