நெல்லிக்காய் பச்சடிதேவையான பொருட்கள்

நெல்லிக்காய்த்துண்டுகள் - 1 கப், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.
 
செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகைச் சேர்த்து, கடுகு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும். பின் நெல்லிக்காய்த்துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். மிளகாய்த்தூள், புளி கரைசல் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். நெல்லிக்காய் நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.