மாம்பழப் பச்சடி



தேவையான பொருட்கள்

மாம்பழம் - 2, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை

மாம்பழத்தைத் துண்டுகளாக்கவும். பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, மாம்பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். மாம்பழத்தின் இனிப்பும் தேங்காயின் சுவையும் சேர்ந்த அருமையானப் பச்சடி தயார்.