மஞ்சள் பூசணிப் பச்சடி (2)



தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணித்துண்டுகள் - 1 கப், சாம்பார் வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 1, புளி கரைசல் - 1/2 கப், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், வெல்லத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், மிளகாய், பூசணித்துண்டுகள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். புளி கரைசல், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். வெல்லத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்