பீர்க்கங்காய் தோல் துவையல்



தேவையான பொருட்கள்

சுத்தமான பீர்க்கங்காய் தோல்- 1 கப், காய்ந்த மிளகாய் - 10, உ.பருப்பு - 50 கிராம், க.பருப்பு- 50 கிராம், உப்பு- தேவையான அளவு, வெங்காயம்- 1, தேங்காய் துருவல்- 2 ஸ்பூன், புளி- சிறிதளவு, எண்ணெய்- 2 ஸ்பூன்.

செய்முறை

 வாணலியில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோல், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் ஆகியனவற்றை நன்கு வறுக்கவும். சூடு ஆறியவுடன் இரு கலவைகளையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.  சுவையான துவையல் ரெடி. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காய் கூட்டு செய்து, தோல் துவையல் செய்தால் சிக்கனம்.