கொள்ளு துவையல்



தேவையான பொருட்கள்

வறுத்த கொள்ளு- 100 கிராம், வெங்காயம்- 50 கிராம், பூண்டு- 10 பல், காய்ந்த மிளகாய்- 10, மிளகு -10, புளி- சிறிது, தேங்காய் துருவல் - 2 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு.

செய்முறை

கொள்ளுவை வாணலியில் படபடவென வறுத்துக் கொள்ளவும், பின்பு எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு, புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். பின்பு எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய் அரைத்து தாளிக்கவும். சுவையான கொள்ளு துவையல் தயார். இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும்.