பொரிச்ச துவையல்



தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு- 100 கிராம், தேங்காய் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் -2, காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை

துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் இவைகளை எண்ணெய் விட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அத்துடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும், பின்னர் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும். சுவையான பொரிச்ச துவையல் ரெடி, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிளகு ரசத்துடன் கொடுத்தால் நன்கு பால் சுரக்கும்.