மாங்காய் துவையல்தேவையான பொருட்கள்

தோல் துருவிய மாங்காய்  - 1 கப், காய்ந்த மிளகாய் - 8, பச்சை மிளகாய் - 2, கொள்ளு -2 ஸ்பூன், உ.பருப்பு - 1 கைப்பிடி, க.பருப்பு - 2 ஸ்பூன், பெருங்காயம்   சிறு துண்டு, தாளிக்க எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு, உ.பருப்பு, க. பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும். பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் , உப்பு சேர்த்து வதக்கவும். சூடு ஆறியவுடன் மிக்சியில் மாங்காய் கலவையை அரைத்து, பின்பு பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும். பின்பு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான மாங்காய் துவையல் தயார். மசக்கை பெண்களுக்கு உகந்தது.