சௌ சௌ தோல் துவையல்



தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த சௌ சௌ தோல்- 1 கப், உ. பருப்பு -50 கிராம், க. பருப்பு- 50 கிராம், காய்ந்த மிளகாய்- 10, புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, கடுகு - 1 ஸ்பூன், இஞ்சி- 1 துண்டு, எண்ணெய்- 4 ஸ்பூன்.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து க. பருப்பு, உ. பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி இவைகளை வறுத்துக் கொள்ளவும். பின்னர் சௌ சௌ தோலை பொடியாக அரிந்து நன்கு வதக்கவும். இரண்டையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய் அரைத்து எடுத்தால் சுவையான துவையல் ரெடி. சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியானது. (சௌ சௌ காய் கூட்டு செய்து, தோலை வீணாக்காமல் துவையல் செய்யலாம்).