கேரட் துவையல்தேவையான பொருட்கள்

கேரட் துருவல் - 150 கிராம், வெங்காயம், பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் -10,   உ .பருப்பு - 50 கிராம், க. பருப்பு- 50 கிராம், கொள்ளு- 20 கிராம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - ½  டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட் துருவல், பூண்டு இலைகளை வதக்கவும். பின்பு மிளகாய்வற்றல், கொள்ளு, உ.பருப்பு, க.பருப்பு இவைகளை வறுக்கவும். சூடு ஆறியவுடன் கேரட் வதக்கிய கலவையை உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

பின்பு இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு தாளிக்கவும். இத்துடன் கலவையை சேர்த்து கலக்கவும், சுவையான துவையல் ரெடி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுவையான சைட்டிஷ் ரெடி.