தக்காளி, வெங்காயம், பூண்டு- கார துவையல்



தேவையான பொருட்கள்

வெங்காயம்- கால் கிலோ, பூண்டு- 20 பல், தோலுடன் தக்காளி- 100 கிராம், புளி- சிறு துண்டு, காய்ந்த மிளகாய்- 20, நல்லெண்ணெய்- 50 கிராம், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி- சிறிதளவு.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயம், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய் இவைகளை நன்கு வதக்கவும்.பின்னர் ஆறியவுடன்  மிக்சியில் இட்டு நைசாக அரைக்கவும். வாணலில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் உ.பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து, அரைத்த கலவையையும் கலந்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். இது டூர் செல்கையில் எடுத்துச் செல்லலாம். 1 வாரம் வரை கெடாது. சாதம், சிற்றுண்டி எல்லாவற்றிற்கும் சிறந்தது.