நெல்லிக்காய் துவையல்



தேவையான பொருட்கள்

அரை நெல்லிக்காய். (கொட்டை நீக்கியது) - 1 கப், உ.பருப்பு 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, தேங்காய் துறுவல் - அரை கப், பெருங்காயம் - 1 துண்டு, கடுகு- 1 ஸ்பூன், உப்பு -தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு, காய்ந்த மிளகாயை பொன்னிறமாய் வறுத்து எடுக்கவும். பின்பு துருவிய நெல்லிக்காய், தேங்காய், பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதனை  மிக்சியில் உப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். பின்பு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும். சுவையான விட்டமின் நிறைந்த நெல்லி துவையல் தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்திக்கு  சைடிஷ்ஷாகவும் உபயோகப்படுத்தலாம்.  உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.