முள்ளங்கி பருப்பு துவையல்



தேவையான பொருட்கள்

துருவிய வெள்ளை முள்ளங்கி - 1 கப், உ. பருப்பு - 50 கிராம், க. பருப்பு - 50 கிராம், வேர்க்கடலை - 1 கைப்பிடி, புளி- 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10, ப. மிளகாய்  -2 ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு, தாளிக்க எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலையை தனியாக வறுத்து எடுக்கவும். பின்பு மிளகாய், புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். சூடு ஆறியவுடன் மிக்சியில் கரகரப்பாய் வறுத்து எடுக்கவும். சுவையான முள்ளங்கி பருப்பு துவையல் தயார். சுடான சாதத்திற்கு பிசைந்து சாப்பிட சுவை கூடும்.