முள்ளங்கி கார துவையல்தேவையான பொருட்கள்

துருவிய வெள்ளை முள்ளங்கி  - 1 கப்,வெங்காயம்  அரிந்தது - 1 கப், காய்ந்த மிளகாய் - 15, கடுகு - 1 ஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி (துருவியது) - சிறிதளவு, புளி - சிறிது, சீரகம் - 1 ஸ்பூன், உ.பருப்பு - 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கியை நன்கு வதக்கவும். பின்பு காய்ந்த மிளகாய், கடுகு வதக்கவும், பின்பு உப்பு, புளி சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பின் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும் சுவையான முள்ளங்கி கார சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு நல்ல  சைடிஷ். வெங்காயம் விலையேற்ற காலத்தில் இது சிறந்தது.