தக்காளி- பருப்பு துவையல்



தேவையான பொருட்கள்

தக்காளி - கால் கிலோ, கடலைப்பருப்பு- 100 கிராம், கடுகு - 1 ஸ்பூன், பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய்- 10, எண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை 4 ஆக அரிந்து வதக்கவும், சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார். இது சப்பாத்தி, இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.