வெங்காயம் கார துவையல்



தேவையான பொருட்கள்

வெங்காயம்- கால் கிலோ, பச்சை மிளகாய் -20, புளி சிறிதளவு, எண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை நன்கு வதக்கவும். பின்னர் அத்துடன் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் புளி சேர்த்து மிக்சியில் நைசாக நன்கு அரைக்கவும். பின்னர் கடுகு தாளிக்கவும். சுவையான வெங்காய கார சட்னி தயார். இது தோசை, இடியாப்பம் ஆகியவற்றிக்கு செம சுவை தரும்.