கேரட் மைசூர் பாக்




தேவையான பொருட்கள்

சர்க்கரை - 750 கிராம், நெய் - 750 கிராம், கேரட் ஜூஸ் - 500 கிராம், கடலை மாவு 1/4 கிலோ.

செய்முறை

சர்க்கரையை 500 மி.லி. கேரட் ஜூஸில் ஊற்றி பாகு காய்ச்சவும். ரெடியாக இருக்கும் கடலை மாவை கட்டி விடாமல் நன்கு கிளறவும்.  கிளறிக்கொண்டே நெய் விட்டு, நெய் விட்டு மிதமான தீயில் மைசூர் பாகு ரெடியாகும் வரை கிளறவும். சிறிது ரெடியானவுடன்  உருண்டை பிடித்தால்,  மைசூர் பாக் ரெடி என அர்த்தம். ஒரு டிரேயில் நெய் ஊற்றி கொதிக்க கொதிக்க பரப்பவும். 3 மணி நேரம் ஆற  விடவும், பின்பு அழகாக கட் செய்து பரிமாறவும்.