மிளகு தட்டைதேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1/2 கிலோ, உளுந்து மாவு - 50 கிராம், ஊற வைத்த கடலை பருப்பு - 100 கிராம், உடைத்த மிளகு - 20 கிராம்,  வெண்ணெய் - 10 கிராம், சீரகம் - 20 கிராம், வெள்ளை எள்ளு - 30 கிராம், உப்பு - தேவைக்கு.

செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து  எடுக்கவும். வாழை இலையில் எண்ணெய் தடவி கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும், மாவை சிறு சிறு உருண்டைகளாகத் தட்டி  பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான மிளகு தட்டை தயார்.