கருப்பட்டி ரசகுல்லா
தேவையான பொருட்கள்
கருப்பட்டி - 2 கிலோ, ரவா - 50 கிராம், ஏலக்காய் - 6, பசும்பால் - 5 லிட்டர், வினிகர் 1/2 பாட்டில், பால் பவுடர் - 50 கிராம்.
 செய்முறை
பசும்பாலை நன்றாக காய்த்து, அதனுடன் வினிகர் சேர்த்து திரித்து எடுக்கவும். பாலாடை கட்டியை ஒரு துணியில் 1/2 மணி நேரம் கட்டி தொங்க விடவும். தண்ணீர் வற்றி பாலாடை கெட்டியானவுடன் ரவா மற்றும் பால் பவுடர் சேர்த்து சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும். கருப்பட்டியை நான்கு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்த்து அதில் உருட்டிய பால் கட்டியை வேக வைக்கவும். ரசகுல்லா நன்கு வெந்த பிறகு அதே பாகில் ஆறவிடவும். கருப்பட்டி ரசகுல்லா ரெடி.
|