காலா ஜாமூன்



தேவையான பொருட்கள்

இனிப்பில்லாத கோவா -  1/4 கிலோ, சர்க்கரை - 750 கிராம், மைதா - 60 கிராம், ஆப்ப சோடா - 1 சிட்டிகை, ஏலக்காய்் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன், ஜாதிக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்.

செய்முறை
 
சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி  5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்க வேண்டும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க  வேண்டும். 1 லிட்டர் கடலை எண்ணெயில் மிதமான சூட்டில் செய்ய வேண்டும். பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து  கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக மாலிஷ் செய்ய வேண்டும். 5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து பொன்னிறத்தில்  வறுக்க வேண்டும். சூடாக இருக்கும் ஜீராவில் சேர்க்க வேண்டும்.