முந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா



தேவையான பொருட்கள்

கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், முந்திரி - 100 கிராம், நறுக்கிய கீரை - 100 கிராம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 20  கிராம், உப்பு - தேவைக்கு, வெண்ணெய் - 50 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எண்ணெய் - 1 லிட்டர்.

செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விடாமல் நன்றாக கிளறவும். வாணலியில்  எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கிளறி வைத்த பக்கோடா மாவை உதிரியாகப் போட்டு மிதமான தீயில்  பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி பொன்னாங்கண்ணிக் கீரை பக்கோடா தயார்.


குறிப்பு: உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.