பாதுஷா



தேவையான பொருட்கள்

மைதா - 75 கிராம், சர்க்கரை - 1 கிலோ,  ரீபைண்ட் ஆயில் - 500 கிராம், லெமன் சால்ட் - 1 சிட்டிகை, ஆப்ப சோடா - 5 கிராம்,  நெய் - 200 கிராம்.

செய்முறை

மைதா மாவில் சிறிது லெமன் சால்ட், ஆப்ப சோடா, உருகிய நெய், சிறிது தண்ணீர் ஊற்றி பிசையவும். ஈரத்துணி போட்டு கவர்  செய்து 10 நிமிடம் ஊற வைக்கவும். சர்க்கரையை 1½ லிட்டர் தண்ணீரில் பாகு காய்த்து வைக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு  உருண்டைகளாகச் செய்து, உள்ளங்கையில் சப்பையாக தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்த பாதுஷாவை, சர்க்கரை பாகில் 5  நிமிடம் ஊற வைத்து எடுத்து அடுக்கவும்.