நவதானிய நியூட்ரி லட்டுதேவையான பொருட்கள்

தினை - 30 கிராம், கம்பு - 30 கிராம், ராகி - 30 கிராம், பச்சை பயறு - 30 கிராம், சோளம் - 30 கிராம், சம்பா கோதுமை - 30 கிராம்,  வெள்ளைச் சோளம் - 30 கிராம், பாதாம் - 30 கிராம், குதிரைவாலி - 30 கிராம், வெல்லம் (தூள்) - 250 கிராம், நெய் - 50 கிராம்,  ஏலக்காய் - 10 கிராம், முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம்.

செய்முறை

மேற்கூறிய நவதானியங்களை லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் நெய்யை சூடு செய்து முந்திரி, திராட்சையை  லேசாக வறுத்து எடுக்கவும். மேற்கூறிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து, வறுத்த நெய் கலவையை அதில் சேர்த்து, சிறு சிறு  உருண்டைகளாக பிடிக்கவும். நவதானிய நியூட்ரி லட்டு தயார்.
\