நெய், தேங்காய் போளி




தேவையான பொருட்கள்
 
வெல்லம் - 400 கிராம், ரவை - 25 கிராம், ஏலக்காய் - 1½ டீஸ்பூன், மைதா - 500 கிராம், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 200 கிராம், தேங்காய் - 1½  மூடி, நெய் - 100 கிராம், உப்பு - தேவைக்கு.

செய்முறை

மைதாவில் நெய் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து இலகுவான பதத்தில் மாவு பிசைய வேண்டும். வெல்லத்தை  பாகு காய்த்து அதில் ரவை மற்றும் தேங்காய் சேர்த்து, ஏலக்காய் சேர்த்து, நெய் விட்டு கெட்டியானவுடன் இறக்கவும்.

ஆறியவுடன்  பூரணத்தை உருண்டைகளாக உருட்டவும். பின்பு ஒரு வாழை இலையில் 30 கிராம் அளவு மைதா மாவை எடுத்து சப்பாத்தி போல்  இட்டு பூரண உருண்டைகளை வைத்து தேய்த்து, நல்லெண்ணெய் விட்டு இரண்டுபுறமும் ெபான்னிறமாக சுட்டு எடுக்கவும்.