மாவு லட்டுதேவையான பொருட்கள்

உடைச்ச கடலை மாவு - 100 கிராம், வறுத்த உளுந்து மாவு - 100 கிராம், சர்க்கரை (பொடி) - 200 கிராம், ஏலக்காய் தூள் - 10 கிராம்,  முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம், நெய் - 100 கிராம்.

செய்முறை

மிதமான சூட்டில் நெய்யை சூடு செய்து முந்திரி, திராட்சையை லேசாக வறுத்து எடுக்கவும். மேற்கூறிய பொருட்களை ஒரு  பாத்திரத்தில் எடுத்து, வறுத்த நெய் கலவையை அதில் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். மாவு லட்டு தயார்.