மிளகு தட்டை சாட்




தேவையான பொருட்கள்
 
மைதா - 1 கிலோ, டால்டா - 200 கிராம், தண்ணீர் - 450 மி.லி, ஓமம் - 5 கிராம், தயிர் - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 லிட்டர்,  உருளைக்கிழங்கு - 15 கிராம், உப்பு - தேவைக்கு.காரச்சட்னி: பச்சை மிளகாய் - 50 கிராம், புதினா - 50 கிராம், மாங்காய் - 2 துண்டுகள், உடைச்ச கடலை - 20 கிராம்.ஸ்வீட்/ கஜீர் சட்னி: சர்க்கரைப் பாகு, வெல்லம் - 1/4 கிலோ, பேரீச்சம்பழம் - 200 கிராம், கரம் மசாலா - 10 கிராம், உப்பு - தேவைக்கு. ஜீரா பவுடர் - 5 கிராம், மல்லித்தூள் - 5 கிராம், சாட் மசாலா - 20 கிராம், காஷ்மீரி சில்லி - 15 கிராம், மிளகாய்த்தூள் - 10 கிராம்.

செய்முறை

மைதா மாவு, உப்பு, ஓமம் ஆகியவற்றை கலக்கிக் கொள்ளவும். பின்பு டால்டா, தண்ணீரை சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடம்  வைக்கவும். சிறு சிறு உருண்டைகள் பிடித்து, பூசி தேய்ப்பதுபோல் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் (மிதமான  சூட்டில்) மிளகு தட்டை தயார். காரச்சட்னி, ஸ்வீட் சட்னி, தயிர் ஆகியவற்றை தனித்தனியாக தயார் செய்துகொள்ளவும். ஒரு தட்டில் 5, 6 தட்டைகளை வைத்து, உருளைக்கிழங்கு வைத்து, தயிர் ஊற்றி, கஜீர் சட்னி சிறிதளவு ஊற்றி, பின்பு காரச்சட்னி சேர்க்கவும். அதன்மேல் அனைத்து மசாலாக்களையும் சிறிதளவு தூவி, ஓமம் (பொடி), கொத்தமல்லியை மேலே தூவி பரிமாறவும்.