முந்திரி மிக்சர்தேவையான பொருட்கள்

கடலை மாவு - 750 கிராம், அரிசி மாவு - 250 கிராம், முந்திரி - 300 கிராம் (வறுத்தது), திராட்சை - 50 கிராம், வேர்க்கடலை - 100  கிராம்,  பிளாக் சால்ட் - 20 கிராம், மிளகாய்த்தூள் - 10 கிராம், மிளகுத் தூள் - 10 கிராம், கரம் மசாலா தூள் - 5 கிராம், உப்பு -  தேவைக்கு.

செய்முறை

கடலை மாவு மற்றும் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து Mixture அச்சில்  Mixture  பிழிந்து எடுக்கவும். முந்திரியை, வேர்க்கடலையை தனியாக பொரித்துக் கொள்ளவும். அதே போல் திராட்சையையும்  பொரித்துக் கொள்ளவும். ஏற்கனவே செய்துள்ள மிக்சருடன் முந்திரி, திராட்சை, பிளாக் சால்ட், மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம்  மசாலா. உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். முந்திரி மிக்சர் பரிமாற ரெடி.