இனிப்பு, காரம், காபி...தமிழரின் கலாசார பண்பாட்டின் ஆரம்பம் இனிப்பு. இனிப்பு என்றால், நல்வரவு, நல்விஷயம், மங்களம் போன்ற பல நல்ல  அர்த்தங்களை கொண்டது. ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ன்னு சும்மாவா சொன்னாங்க.  நெய்  சொட்டும் இனிப்புக்கு இணையாக காரம்  இருந்தால் அதன் சுவையோ அலாதி. மாலை விருந்திற்கு இரண்டுமே மகத்துவம். முத்தமிழ் கலாசாரத்தில் திளைத்திருக்கும்  மயிலையில், மேலும் மகுடம் சேர்க்க 44 வருட பாரம்பரியமிக்க ‘நம்ம வீடு வசந்த பவன்’ ஓட்டல் குழுமத்தின் அடுத்த அறிமுகம் VB Sweet & Snacks.

தித்திக்கும் இனிப்பு மற்றும் மொறு மொறு கார வகைகள், சாட் வகைகள் (chat items) இங்கு சிறப்பு. இதனுடன் சுவையான சூடான  பில்டர் காபி சேர்ந்தால் தனிச் சிறப்பு.இந்த இதழில் V.B. Special Sweets & Snacks செய்து காட்டி அசத்தி யிருப்பவர், இந்நிறுவனத்தின் Group Executive Chef. வெர்ஜில் ஜேம்ஸ் அவர்கள் சமையற் கலையில் 23 வருட அனுபவம் கொண்ட இவரின் தனிச்சிறப்பு சுவையான உணவு வழங்குவது மட்டுமல்லாமல், உணவு அலங்கரிப்பதிலும் இவர் கைத்தேர்ந்தவர். உணவுத் துறையில் Gold Medalist; Celebrity chef, Receipe writer, Food Demonstrator என பன்முகக் கலைகளை கொண்டவர். இந்த இதழில் தோழியர் உங்களுக்காக ‘நம்ம வீடு வசந்த பவன் ஓட்டல் குழுமத்தின் கைப்பக்குவத்தில் வெரைட்டி இனிப்பு மற்றும் கார வகைகள்.

தொகுப்பு: ப்ரியா மோகன்