லெளகி அல்வாஎன்னென்ன தேவை?

துருவிய சுரைக்காய் - 1/2 கிலோ,
சர்க்கரை - 150 கிராம்,
பால் - 1/4 லிட்டர்,
நெய் - 6 டேபிள்ஸ்பூன்,
கோவா - 50 கிராம்,
விரும்பினால் பச்சை ஃபுட் கலர் - 1 சிட்டிகை,
பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு சுரைக்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பால் சேர்த்து வேகவைத்து சர்க்கரை சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து இறுகி வரும் போது துருவிய கோவா, நட்ஸ், நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.