ரெட் கேரட் லட்டுஎன்னென்ன தேவை?

டெல்லி கேரட் துருவியது - 1 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
நெய் - 6 டேபிள்ஸ்பூன்,
பாதாம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை, வெள்ளரி விதை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாதாம், முந்திரி, பிஸ்தாவை கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கேரட் துருவலை சேர்த்து நன்கு வதக்கி சர்க்கரை, பொடித்த நட்ஸ், காய்ந்த திராட்சை சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து நன்கு சுருண்டு வரும்பொழுது மீதியுள்ள நெய்யை ஊற்றி இறக்கவும். ஆறியதும் லட்டுகளாக பிடித்து அலங்கரித்து பரிமாறவும்.