மேதீ முத்தியாஎன்னென்ன தேவை?

வெந்தயக்கீரை - 2 கட்டு,
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எள் - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.