பாரவன் ஆலுஎன்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 400 கிராம்,
வெங்காயம் - 2,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தக்காளி - 1,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பனீர் அல்லது இனிப்பில்லாத கோவா - 6 துண்டுகள்,
மைதா - 3 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பாதியாக நறுக்கி நடுவில் ஸ்பூன் வைத்து குடைந்து கொள்ளவும். பூரணத்திற்கு பனீர், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், இஞ்சி விழுது சேர்த்து கலந்து உருளைக்கிழங்கின் நடுவில் வைத்து மைதா கரைசலில் முக்கி சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

கடாயில்  எண்ணெயை  காயவைத்து கடுகு, சீரகம், பெருங் காயத்தூள் தாளித்து வெங்காய விழுது, தக்காளி விழுது, மசாலாத்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கி உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும். பிறகு பொரித்த உருளைக் கிழங்கை போட்டு கிளறி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.