பஞ்சாபி ஆலு சாட்என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 4,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - 2 கப்,
காய்ந்த மாங்காய் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - 1 டீஸ்பூன்,
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்,
பெருஞ்சீரகப் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொண்டு, அதை துணியில் வைத்து அமுக்கி மீண்டும் பொரிக்கவும்.

சட்னி செய்ய...

தவாவை சூடு செய்து சர்க்கரை, தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து கொதித்து வரும்பொழுது மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு கலக்கவும். நன்றாக இறுகி வரும்பொழுது மீண்டும் 1 சிட்டிகை சாட் மசாலாத்தூள் தூவி இறக்கி, தட்டில் பொரித்த உருளைக்கிழங்கை அடுக்கி அதன் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி பரிமாறவும்.