மால் பூவாஎன்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
சர்க்கரை - 1¼ கப்,
தண்ணீர் - தேவைக்கு,
உப்பு - 1 சிட்டிகை,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா - தலா 15.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திர த்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து இளம் பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து சூடான எண்ணெயில் தட்டையாக ஊற்றி பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் புரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைத்து பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, திராட்சையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.