லெளகி பார்தா



என்னென்ன தேவை?

துருவிய சுரைக்காய் - 1/2 கிலோ,
தக்காளி - 3 அரைக்கவும்,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பாவ்பாஜி மசாலா - 1 டீஸ்பூன்,
பச்சைப்பட்டாணி - 50 கிராம்,
புளிக்காத கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

துருவிய சுரைக்காய், பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், காய்ந்தமிளகாய், இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மசாலாத்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கி எண்ணெய் தனியே பிரிந்து வரும்பொழுது வெந்த சுரைக்காய், பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கலந்து தயிர் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி ஃப்ரெஷ் கிரீம் கலந்து பரிமாறவும்.