ராஜ் கச்சோரிஎன்னென்ன தேவை?

பூரிக்கு...
மைதா - 1 கப், ரவை - 1/4 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
வேகவைத் உருளைக் கிழங்கு - 2,
பச்சைப்பயறு - 2 டீஸ்பூன்,
தயிர் - 1 கப், சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - 1 சிட்டிகை,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி சட்னி - 4 டேபிள்ஸ்பூன்,
காராபூந்தி அல்லது ஓமப்பொடி - 1 கப்,
இனிப்பு சட்னி - 1/4 கப்,
 மாதுளை முத்துக்கள் - 1 கப்,சாட் மசாலாத்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சின்னச் சின்னச் பூரியாக திரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். இந்த பூரியில் நடுவில் துளையிட்டு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பரிமாறவும்.