குர்குரே பிண்டிஎன்னென்ன தேவை?

வெண்டைக்காய் - 1/2 கிலோ,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
கடலை மாவு  - 5   டேபிள்ஸ்பூன்,   
எலுமிச்சைப் பழம் - 1.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய், எலுமிச்சைப்பழத்தை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெண்டைக்காயில் ஸ்டஃப்டு செய்து சூடான எண்ணெயில் வெண்டைக்காயை பொரித்தெடுத்து கொள்ளவும். பரிமாறும்போது எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.