மோதக்என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
ஏலக்காய் - 2,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, கடலைப்பருப்பை சேர்த்து கிளறி நன்கு இறுகி வந்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பூரி அளவிற்கு திரட்டி நடுவில் பூரணம் வைத்து மாவை இழுத்து மூடி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். 2 நாட்கள் வரை கெடாது.