மக்னா கீர்



என்னென்ன தேவை?

மக்னா - 2 கப்,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 2 கப்,
பால் - 1/2 லிட்டர்,
காய்ந்த கிர்ணி பழ விதை - 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
முந்திரி - 6.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மக்னாவை போட்டு நன்றாக பொரித்தெடுத்து வைக்கவும். ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு பொடித்த மக்னாவை சேர்த்து நன்கு கலந்து வாசனை வரும்பொழுது இறக்கி குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி, கிர்ணி பழ விதை சேர்த்து பரிமாறவும்.