பாலக் கோப்தாஎன்னென்ன தேவை?

கோப்தாவுக்கு...

நறுக்கிய பாலக் கீரை - 1 கட்டு,
பனீர் - 15 துண்டுகள்,
சோள மாவு அல்லது கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி - 1/4 இன்ச் துண்டு.

கிரேவிக்கு...

வெங்காயம் - 3,
தக்காளி - 2,
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு,
கிராம்பு - 5,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1/4 கட்டு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோப்தாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உருண்டைகளாக செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், கிராம்பு தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மசாலா தூள் அனைத்தையும் வதக்கி, உப்பு, சிறிது தண்ணீர் ேசர்த்து கிரேவி பதத்திற்கு வந்ததும் பொரித்த கோப்தாக்களை போட்டு இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.