கடி பக்கோடிஎன்னென்ன தேவை?

கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 2, தக்காளி - 1,
உருளைக்கிழங்கு - 1,
பட்டாணி - 1 கைப்பிடி,
காய்ந்தமிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - 1 கட்டு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன், உப்பு,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
தயிர் - 1 பெரிய கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பட்டாணி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள் கலந்து சூடான எண்ணெயில் பக்கோடாவாக போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள், தயிரை நன்கு அடித்து ஊற்றி, பக்கோடா சேர்த்து கலந்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.