மூலி அல்வா



என்னென்ன தேவை?

வெள்ளை முள்ளங்கி - 1/4 கிலோ,
பால் - 1 கப்,
சர்க்கரை - 1/2 கிலோ,
நெய் - 6 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, வெள்ளரி விதை - தேவைக்கு,
குங்குமப்பூ - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

முள்ளங்கியை துருவிக் கொள்ளவும். கடாயில் துருவிய முள்ளங்கி, பால் சேர்த்து கலந்து நன்றாக வேகவைக்கவும். நன்கு வெந்து வந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து, குங்குமப்பூ சேர்க்கவும். இடை இடையே நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். அல்வா பதத்திற்கு சுருண்டு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, வெள்ளரி விதையை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.