பச்சைப்பயறு தோசைஎன்னென்ன தேவை?

பச்சைப்பயறு - 1 கப்,
புழுங்கல் அரிசி - 1 கப்,
உளுந்து - 1/2 கப்.
உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஊறவைத்து அரைத்து, 2 மணி நேரம் புளிக்க வைக்கவும். இத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.